தங்க பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் - ஆகஸ்ட் மாதத்தில் ரூ.908 கோடிக்கு முதலீடு
பதிவு : செப்டம்பர் 13, 2020, 08:52 AM
தங்கத்தில் முதலீடு செய்யும் நிதி நிறுவன பங்குகளில், கொரோனா தாக்க காலத்தில், தொடர்ச்சியாக முதலீடுகள் குவிந்து வருகின்றன.
தங்கத்தில் முதலீடு செய்யும் நிதி நிறுவன பங்குகளில், கொரோனா தாக்க காலத்தில்,  தொடர்ச்சியாக முதலீடுகள் குவிந்து வருகின்றன.  ஆகஸ்ட் மாதத்தில் இவ்வகை நிதிகளில் 908 கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி முதல் ஆக்ஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 356 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது.  இதனால் இவ்வகை நிதிகளின் கட்டுபாட்டில் உள்ள தங்க பத்திரங்களின் மொத்த மதிப்பு, ஆகஸ்ட் மாத இறுதியில் 13 ஆயிரத்து 503 கோடியாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காலத்தில், தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என்பதால் இதில் முதலீடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.