சித்திரைச்சாவடி அணையில் அமைச்சர் திடீர் ஆய்வு
பதிவு : செப்டம்பர் 13, 2020, 08:38 AM
கோவை சித்திரைச்சாவடி அணையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.
கோவை சித்திரைச்சாவடி அணையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள சித்திரைச்சாவடி அணையை அமைச்சர் திடீரென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோவை மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற மழை அளவு, மழையால் எந்த அளவுக்கு ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன, நீர் ஆதாரத்தை பெருக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டறிந்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.