ஆயுதப்படை காவலரின் ஊதிய உயர்வு ரத்து செய்தது சரியே - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி
பதிவு : செப்டம்பர் 13, 2020, 08:25 AM
கோவை காவல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் சென்ற, ஆயுதப்படை காவலருக்கு 2 ஆண்டு ஊதிய உயர்வை ரத்து செய்து ஆணையர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்​ கிளை உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆயுதப்படை காவலர்கள், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து , ஊர்வலம் சென்ற ஆயுதப்படை காவலர்களுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதனை எதிர்த்து, காவலர் மாரிமுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், தமிழ்நாடு காவல்துறை ஒழுக்க விதிகளின்படி, காவலர்கள் வேலை நிறுத்தம் அல்லது போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, 2 ஆண்டு மட்டும் ஊதிய உயர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையரின் உத்தரவு சட்ட விரோதமும் இல்லை என்று கூறி,   வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.