கோவேக்சின் சோதனையில் வெற்றி - பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 08:20 AM
மாற்றம் : செப்டம்பர் 13, 2020, 09:28 AM
இந்தியாவின் பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மிருகங்களின் உடலில் செலுத்தி செய்யப்பட்ட சோதனையில் வெற்றி கிடைத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் என்கிற நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்கிற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பு மருந்தை கடந்த ஜூலை மாதம் முதல் மனிதனின் உடலில் செலுத்தி சோதனை செய்யும் முதற்கட்ட மருத்துவ சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குரங்கின் மீது செலுத்தப்பட்ட மருத்துவ சோதனையில் வெற்றி கிடைத்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவேக்சின்  செலுத்தப்பட்ட குரங்குகளின் உடலில் வைரஸுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் எதிர்ப்புத் தன்மை உருவாகி உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மிருகங்களின் உடலில் செலுத்தி செய்யப்பட்ட மருத்துவ சோதனையில் வெற்றி கிடைத்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.