நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - கலைவாணர் அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 08:14 AM
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை கலைவாணர் அரங்கில் கூடும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதனையடுத்து நாளை தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இம்முறை கொரோனா தாக்கம் காரணமாக ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி லார்ட் வெலிங்டன் சென்னை மாகாண ஆளுநருக்கு கொடுத்த பழமையான சபாநாயகர் இருக்கை கலைவாணர் அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் , அமைச்சர்கள் , எம்.எல்.ஏக்கள் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் அமைக்கப்படுகிறது. மேலும் மறைந்த தலைவர்களான காமராஜர் , அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் கலைவாணர் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டம் - 2 பேருக்கு மட்டும் தொற்று உறுதி 

தமிழக சட்டப்பேரவை நாளை கூடும் நிலையில் , அதில் பங்கேற்க உள்ள எம்.எல்.ஏக்கள் உட்பட 522 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  சட்டப்பேரவை செயலக அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் , போலீசார் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் அமைச்சரின் அலுவலக உதவியாளர் உட்பட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது , இதனையடுத்து அவர்கள் இருவரும் தனிமைபடுத்தப்பட்டனர்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.