நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசே காரணம் - வைகோ கண்டனம்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 04:53 PM
நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழப்பதற்கு மத்திய அரசே காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழப்பதற்கு மத்திய அரசே காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். பாஜக அரசின் நீட் திணிப்பால், தமிழ்நாட்டில் மாணவ - மாணவிகள் தொடர் தற்கொலை, அதிர்ச்சி அளிக்கின்றது என, அறிக்கையில் கூறியுள்ளார். மத்திய அரசின் இக்கொடூரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கத் தமிழக அரசு ஆயத்தமாக இல்லை என்றும் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால்தான் இதுபோன்ற உயிர்ப் பலிகள் தடுக்கப்பட்டு,  சமூக நீதியை நிலை நாட்ட முடியும் என வைகோ கூறியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.