சீனப்பொருட்களை கடத்துவோரை சுட்டு வீழ்த்த கிம் ஜாங் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 12, 2020, 04:37 PM
கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக, சீனாவுடனான எல்லையை வட கொரியா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மூடி வைத்துள்ளது.
கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக, சீனாவுடனான எல்லையை வட கொரியா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மூடி வைத்துள்ளது.  இதனால் அந்த நாட்டின் இறக்குமதி 85 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்த நிலையில் சீனாப்பொருட்கள் எல்லை வழியே ரகசியமாக கடத்தி வரப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அதனை தடுக்க சிறப்பு ராணுவ வீரர்களை சீன எல்லையில் வடகொரியா நிறுத்தியுள்ளது. மேலும் எல்லை பகுதியில் சுற்றித்திரிபவர்களை சுட்டு வீழ்த்தும் படி ராணுவ வீரர்களுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க படைகளின் தலைவரான ஜெனரல் ராபர்ட் ஆப்ராம்ஸ் இதனை  தெரிவித்துள்ளார். இதுவரை வட கொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா  தொற்றியதாக அந்நாட்டு அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.