மத்திய அரசின் விவசாய திட்டத்தில் ஊழல் - சிபிஐ விசாரணை வேண்டி போராட்டம்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 04:18 PM
மத்திய அரசின் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பனிரெண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பனிரெண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி
கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாய திட்டத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமான பெண் விவசாயிகள் கையில் தேசியக் கொடியை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும், தடையை மீறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.