71 கல்வியியல் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து - கட்டமைப்பு வசதி இல்லாததால் நடவடிக்கை
பதிவு : செப்டம்பர் 12, 2020, 02:21 PM
எழுபத்தியோரு ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கும் 7 அரசு கல்லூரிகள் உட்பட 731 ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கை அனுமதி, அங்கீகராத்தை நீட்டிப்பு செய்யக் கோரி விண்ணப்பத்திருந்தன. இதனை பரிசீலித்த என்.சி.டி.இ, உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 58 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 13 கல்வியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெறாததால், அந்தக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது என அறிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட 71 கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்ட ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அந்தக் கல்லூரிகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.