தங்கக் கடத்தல் விவகாரம்: விசாரணைக்கு உள்ளான அமைச்சர் - ராஜினாமா கோரி போராட்டம்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 02:16 PM
தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல், அமலாக்கத் துறை விசாரணைக்கு உள்ளானார்.
தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல், அமலாக்கத் துறை  விசாரணைக்கு உள்ளானார். இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி நேற்று மாநிலம் முழுவதும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தியதில் 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இன்று கறுப்பு நாளாக அனுசரிக்கப்படும் என கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தலைமை செயலகம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை  போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.