சாலை வசதியின்றி பரிதவிக்கும் கிராம மக்கள் - நிறைமாத கர்ப்பிணியை டோலியில் தூக்கிச் சென்ற அவலம்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 01:41 PM
ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்காடா மலை கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி தேவுடம்மா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் உள்ள  துங்காடா மலை கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி தேவுடம்மா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி
ஏற்பட்டுள்ளது. அவரை டோலியில் படுக்க வைத்து  சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தூரம் சாலை வசதி உள்ள இடத்திற்கு உறவினர்கள் தூக்கிச் சென்றனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் 2 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் ஆட்டோ வரவழைத்து கர்ப்பிணி பெண்ணை விஜயநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டோலியில் தூக்கி செல்லும் போது உடனிருந்த பெண்கள், "ஜெகன் அண்ணா, நாங்கள் படும்  கஷ்டத்தை பாருங்கள்" என்று கூறியவாறு,  சாலை வசதி செய்து தர ஆந்திர முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.