கிரேனுக்கு வழிகாட்டியவர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் - போலீசார் விசாரணை
பதிவு : செப்டம்பர் 12, 2020, 01:19 PM
சென்னை மாதவரத்தில் தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் காவலாளி ஒருவர் கிரேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை மாதவரத்தில் தனியார் சரக்கு பெட்டக முனையத்தில்  காவலாளி  ஒருவர் கிரேன்  சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த  CCTV  காட்சிகள் வெளியாகியுள்ளது. மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த ஆரோக்கியம் என்பவர், ராட்சத கிரேன் இயந்திரத்திற்கு  செய்கையில் வழிகாட்டி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் சக்ரத்தில் சிக்கிய ஆரோக்கியம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள கிரேன் ஓட்டுனரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஆரோக்கியம் கிரேன் சக்கரத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.