50 ஆண்டுகளுக்கு பிறகு அக்கம்மாபுரம் ஏரி சீரமைப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
பதிவு : செப்டம்பர் 12, 2020, 12:54 PM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அக்கம்மாபுரம் ஏரி சீரமைக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் 19 கோடி ரூபாய் செலவில் 29 ஏரிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்குட்பட்ட அக்கம்மாபுரம் ஏரி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சீரமைக்கப்படுகிறது. 57 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவில் மதகுகள் சீரமைத்தல், தூர்வாரி ஏரிக்கரையை பலப்படுத்தி சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெறும் இப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும் விவசாயிகள் ஏரியில் தண்ணீர் நீர் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.