டீக்கடைக்கு தீ வைத்த இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 12, 2020, 12:49 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டீக்கடைக்கு இளைஞர்கள் 2 பேர் தீ வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டீக்கடைக்கு இளைஞர்கள் 2 பேர் தீ வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கூமாப்பட்டி பகுதிக்கு குடிபோதையில் வந்த 2 இளைஞர்கள் ரகளை செய்யவே, அவர்களை பொதுமக்கள் விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பழிவாங்கும் நடவடிக்கையாக ஜலால் என்பவரின் டீக்கடைக்கு தீ வைத்தனர். ஆனால் சற்று நேரத்திலேயே தீ கட்டுப்படுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இளைஞர்கள் தீ வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.