மாணவி தற்கொலை - ஸ்டாலின் இரங்கல்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 12:45 PM
நீட் தேர்வு அச்சத்தால், மாணவி ​ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால், மாணவி ​ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மாணவியின் மரணம், தமக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வானது, மாணவர்களை  நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்கா வரை உணர முடிகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல எனவும் பதிவிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.