குட்கா விவகாரம் உரிமைக் குழு நோட்டீஸ் - உயர்நீதிமன்றத்தில் தி.மு.க ரிட் மனு தாக்கல்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 12:39 PM
குட்கா விவகாரம் உரிமைக் குழுவின் புதிய நோட்டீஸை எதிர்த்து, தி.மு.க எம்.எல்.ஏக்கள், உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகள் காட்டியது தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2017 ஜூலை மாதம் நடைபெற்ற நிகழ்வு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தி.மு.க சார்பில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புது நோட்டீஸ் அனுப்பப்பட்டதன் நோக்கம், நாளை மறுதினம் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்பதை தடுப்பதும்,கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்டமன்றத்தில் எழுப்புவதைத் தவிர்க்கவும் தான் தி.மு.க தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.