இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி வெற்றி
பதிவு : செப்டம்பர் 12, 2020, 10:52 AM
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 275 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்தின் பில்லிங்ஸ் விளாசிய சதம் வீண் ஆனது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.