கொரோனா பரிசோதனை முடிவை எழுதி தர வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் போராட்டம்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 10:31 AM
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 14 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் பரிசோதனை முடிவை சான்றாக வாங்கி  சென்னைக்கு கொண்டு செல்ல உள்ளனர். இதையொட்டி, நாகர்கோவில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜனின் உதவியாளர் சந்திரகுமாரின் பரிசோதனை முடிவை  முகவரியுடன் சீல் வைக்கப்பட்ட சான்றாக தருமாறு ஆசாரிப்பள்ளம் வட்ட திமுக செயலாளர் விமல், கேட்டுள்ளார். இதற்கு பரிசோதனை மையம் மறுப்பு தெரிவித்ததால் மருத்துவமனை முன்பு அமர்ந்து விமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.