தென்பெண்ணை நீரை சுத்தப்படுத்த சுத்திகரிப்பு நிலையம் - தி.மு.க. எம்.எல்.ஏ.கள் கோரிக்கை
பதிவு : செப்டம்பர் 12, 2020, 10:02 AM
தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரிக்க, மாநில எல்லைப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தின் நந்திமலையில் உற்பத்தியாகி தமிழகத்திற்கு வரும் தெண்பெண்ணை ஆற்று நீர் ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை, திருவண்ணாமலை சாத்தனூர் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நிரம்பி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை செழிப்படைய செய்து வருகிறது. ஒசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் இந்த ஆற்றுநீர் சுத்திகரிக்கப்பட்டு தினந்தோறும் அனுப்பப்பட்டு பயன்பட்டு வருகிறது.சமீபகாலமாக தென்பெண்ணை ஆற்றுநீர் கர்நாடகா மாநிலத்திலிருந்து தொழிற்சாலை ரசாயண கழிவுகளுடன் கடும் துர்நாற்றம் வீசி, நுரைகளுடன் விவசாயத்திற்கு பயன்படாத வகையில் வெளியேறி வருகிறது. இந்நிலையில், ஒசூர் அருகேயுள்ள பேளகொண்டப் பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் மற்றும் சத்யா, இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  தொழிற்சாலை கழிவுகளுடன் வரும் நீரை தமிழகத்திற்குள் சுத்திகரித்து நல்ல நீராக அனுப்பும் வகையில் கொடியாளம் தடுப்பணை பகுதியில் நவீன சுத்திகரிப்பு நிலையத்தை அரசு அமைத்து கொடுக்க வேண்டும் என அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அ.தி.மு.க. அரசு செய்ய முன்வராத நிலையில்,  தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் இந்த திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.