துணை மருத்துவ படிப்பு மாணவர்கள் கல்லூரி திரும்ப உத்தரவு
பதிவு : செப்டம்பர் 12, 2020, 09:56 AM
துணை மருத்துவ படிப்பு மாணவர்கள் உடனடியாக கல்லூரிக்கு திரும்ப மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.
துணை மருத்துவ படிப்பு மாணவர்கள் உடனடியாக கல்லூரிக்கு திரும்ப மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நர்சிங், முதலுதவி சிகிச்சை, ரேடியாகிராபி, டையட்டிக்ஸ், பிஸியோ தெரபி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் உடனடியாக கல்லூரி திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மாணவர்கள் கல்லூரிக்கு வர மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், படிப்பை முடிக்க தாமதப்படுத்தப்படும் அல்லது தள்ளி வைக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கல்லூரிகளுக்கு திரும்பும் மாணவர்களை உடனடியாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்புப் பணிகளில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.