ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து - விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 12, 2020, 09:49 AM
ஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்கா நகரில் ராணுவ ஆயுத கிடங்குகள் உள்ளது. இந்த கிடங்குகளில் பயன்படுத்தப்படாத மோட்டார் குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த கிடங்குகளில் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த கிடங்குகளுக்கும் தீ பரவியதால், ஆயுதங்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் வான் உயரத்து தீப்பிழம்புகள் எழுந்ததால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த கிடங்குகளை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும், 2 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.