ஆப்கன் ராணுவ சோதனை சாவடி மீது தலீபான் தாக்குதல் - 16 வீரர்கள் உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 12, 2020, 09:44 AM
கத்தாரில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கத்தார் தலைநகர் தோகாவில் தலீபான் அமைப்புக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்ஹர் மாகாணத்தில் ராணுவ சோதனை சாவடி மீது தலீபான் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். சோதனைச் சாவடியை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியத்தில் 16 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.