அமெரிக்காவை சீனாவுக்கு விற்கும் வேலை - ஜோ பிடன் குடும்பம் மீது டிரம்ப் குற்றச்சா​ட்டு
பதிவு : செப்டம்பர் 12, 2020, 09:40 AM
அமெரிக்காவை சீனாவுக்கு விற்கும் வேலையை, ஜோ பிடன் குடும்பம் செய்து வருவதாக அதிபர் டிரம்ப் சாடியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஜோ பிடனுக்கு சீனா மீது தனி பாசம் உள்ளதாக தெரிவித்தார். ஜோ பிடன் மகன் ஹன்டர் பிடன், சீனாவின் 'போஹய் ஹார்வெஸ்ட்' என்ற நிதி நிறுவனத்தில், 10 சதவீத பங்கை வைத்து உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் 'போஹய் ஹார்வெஸ்ட்' நிறுவனம், மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த, வாகன உதிரிபாகங்கள் நிறுவனத்தை, சீனாவின் ராணுவ ஒப்பந்ததாரருக்கு விற்பனை செய்ய உதவி உள்ளதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்க தயாரிப்பு நிறுவனங்களின் வேலைகளை, சீன ராணுவம் பெற உதவியதன் மூலம், ஜோ பிடன் குடும்பம், பெருந்தொகையை பெற்றுள்ளதாகவும் டிரம்ப் சாடியுள்ளார். 
ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்கா, சீனாவுக்கு சொந்தமாகி விடும் என்றும், 2009ல், துணை அதிபராக இருந்த போது, பன்றிக் காய்ச்சல் பரவலை தடுக்க தவறி, ஆறு லட்சம் பேர் பாதிக்கப்பட காரணமாக இருந்தவர் ஜோ பிடன் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.