துணிச்சல் தலைவி கங்கனா ரணாவத்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 04:34 PM
பாலிவுட் நடிகைகளில் துணிச்சலுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் நடிகை கங்கனா ரணாவத்.
ராஜ்புட் குடும்பத்தை சேர்ந்த  கங்கனா ரணாவத், சிறுவயதிலேயே பாலின பாகுபாட்டை வெறுத்தவர். தன் சகோதரனுக்கு துப்பாக்கி பொம்மையும், தனக்கு அழகிய பார்பி பொம்மையும் வாங்கிக் கொடுத்ததை எதிர்த்தவர். பெண் குழந்தைகள் துப்பாக்கியை வைத்து விளையாடக் கூடாதா?
என அப்போதே கேள்விகளால் துளைத்தெடுத்தவர் கங்கனா.

இவரின் சினிமா பிரவேசத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி தன் இலக்கை அடைந்தார். இதற்காக தன் பணக்கார வாழ்க்கையையே துறந்து விட்டு தினமும் பிரெட்டுக்கு ஊறுகாய் தொட்டு சாப்பிட்டு நாட்களை கடத்தினார் கங்கனா.

ஆசிட் வீச்சுக்கு ஆளான தன் சகோதரியையே தனக்கு மேலாளராகவும், மேக்கப் உதவிக்காகவும் வைத்துக் கொண்டுள்ளார் கங்கனா. சமூகத்தை பார்த்து தன் சகோதரி பயந்து ஒதுங்கக் கூடாது என்பதற்காகவே தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவரையும் அழைத்துச் செல்வது கங்கனாவின் வழக்கம். 

தான் எடுத்துக் கொண்ட நோக்கத்திற்காக துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை திரையுலகில் அடியெடுத்தும் வைக்கும் போதே பெற்றிருந்தார் கங்கணா.

சினிமாவில் அறிமுகமான கால கட்டத்தில் தந்தை வயது கொண்ட  நடிகர் ஆதித்ய பஞ்சோலியுடன் நெருக்கமான உறவில் இருந்தார் கங்கனா. திருமணம் தாண்டிய உறவில் இவர்கள் இருந்த சூழலில் ஒரு கட்டத்தில் பஞ்சோலி குடிபோதையில் தன்னிடம் அத்துமீறியதாகவும், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் பரபரப்பை கிளப்பினார் கங்கணா...

பின்னர் பாலிவுட் நடிகரான ஆதித்யன் சுமன் என்பவருடன் காதலில் இருந்தார் கங்கனா. ஆனால் இவர்களின் காதல் மோதலில் முடியவே, அவரையும் பிரிந்தார். இந்த நாட்களில் தன் முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த ஆதித்யன் சுமன், கங்கனா தனக்கு போதைப் பொருட்களை அறிமுகப்படுத்தியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
இந்த வீடியோவானது இப்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 

இதன் பின்னர் க்ரிஷ் 3 படத்தின் போது நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் டேட்டிங் சென்ற கங்கனா, பின்னர் காதலிலும் விழுந்தார். ஆனால் திடீரென ஹிர்த்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் பரபரப்பை கிளப்பினார் அவர். 

இவரின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது அரசியல் ரீதியாகவும் அவருக்கு பிரச்சினைகள் வலுத்து வருகிறது. 

நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு  பாலிவுட் மாஃபியா மற்றும் ரத்த உறவுகளே  காரணம் என கூறி பரபரப்பை கிளப்பினார் கங்கனா. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஒரு கட்டத்தில் அது போதைப் பொருள் விவகாரத்தில் வந்து நின்றது. அதிலும் கங்கனாவின் பெயர் அடிபட்டது. 

அப்போது மும்பை குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசி, ஆளும் சிவசேனாவின் கண்டனத்தை பெற்றார் கங்கனா. கங்கனாவிற்கு எதிராக மும்பையில் பலரும் திரண்டனர். 

மும்பையில் உள்ள அவரது அலுவலகம் முறைப்படி கட்டப்பட்டது இல்லை என கூறி அது இடிக்கப்பட்ட போதிலும் அசரவில்லை கங்கனா. 

வரலாற்றிலேயே முதல் முறையாக நடிகை ஒருவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது கங்கனாவிற்கு தான்..

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நக்மா உள்ளிட்டோரும் கங்கனாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மும்பைக்குள் இனி கங்கனா வரவே முடியாது என சிவசேனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த சில  மணி நேரங்களிலேயே துணிச்சலாக மும்பைக்கு வந்து இறங்கினார் கங்கனா. 

இப்படி துணிச்சல் நாயகியாக தன்னை எப்போதும் அடையாளப்படுத்தும் கங்கனா, பாலிவுட் நடிகைகளில் தனித்து தான் தெரிகிறார். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

243 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

50 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

15 views

பிற செய்திகள்

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

80 views

நீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

486 views

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை இனையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

4017 views

"நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

97 views

மிஷ்கின் அடுத்த படம் - 20ம் தேதி அறிவிப்பு

இயக்குனர் மிஷ்கின் தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

461 views

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று

நடிகர் ராமராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் இருந்து வந்த நிலையில் , மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்,

270 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.