"தங்கை மீது பெற்றோர் காண்பித்த பாசத்தை பார்த்து சிறுமிக்கு தலைக்கேறிய கோபம் : சிறுமி விபரீத முடிவு"
பதிவு : செப்டம்பர் 11, 2020, 03:37 PM
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் 5 வயது சிறுமி தமது 11 மாத தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா, என்ற பெண் குழந்தையும் 11 மாதமே ஆன ஹேமஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீரென்று காணவில்லை. ஹேமஸ்ரீயை பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்த பெற்றோர் அவளை வீட்டின் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்டனர். இதன் குறித்து ஸ்ரீகாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதியில் ஹேமஸ்ரீயின் அக்கா நிர்மலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்தாகவும் எனவே தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டேன் என்று அக்கா நிர்மலா அப்பாவியாக கூறினாள். நிர்மலா கூறியதை கேட்டு பெற்றோர் மட்டுமே அல்லாமல் போலீசாரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிர்மலா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முடிவில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

104 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

38 views

பிற செய்திகள்

புதுவையில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - ஜிப்மர் நடத்திய ஆய்வில் தகவல்

புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 views

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்

புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 74 பழமையான சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

59 views

திருமலை பிரம்மோற்சவ விழா - கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமிகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று கஜ வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

25 views

"எல்லையில் தன்னிச்சையாக எதையும் மாற்ற முயல வேண்டாம்" - சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

இந்தியா, சீனா இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் வெளியுறவு அமைச்சகம் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

65 views

டெல்லி துணை முதல்வர் உடல் நிலையில் பின்னடைவு - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தீவிரம்

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

257 views

கொரோனா தடுப்பு பணிகள் - மாநில பேரிடர் நிவாரண நிதியில் 50% செலவழிக்கலாம்

கொரோனா தொடர்பான தடுப்பு பணிகளுக்காக மாநில அரசுகள், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 50 சதவீத தொகையை செலவழித்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.