கொரோனாவின் தீவிரத்தை வேண்டுமென்றே மறைத்தார் - டிரம்ப் மீது, கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 02:40 PM
கொரோனா வைரஸ் மக்களை பாதிக்காது என்ற வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கூறி வந்ததாக, துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் புகார் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் மக்களை பாதிக்காது என்ற வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கூறி வந்ததாக, துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், இளைஞர்களை கொரோனா தாக்காது என, பொய் கூறி வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். பறவை காய்ச்சல் போல, கொரோனா வைரஸ் தொற்று காய்ச்சல் போன்றது என, அதன் தீவிரத்தை புரியாமல் பேசி வந்ததாகவும் கமலா ஹாரிஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின், உண்மையான நிலையை, தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தாமல் மக்களை தவறாக திசை திருப்பி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.