2 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் - அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 02:31 PM
கேரளாவில் உள்ள குட்டநாடு, சவாரா ஆகிய தொகுதிகளின், எம்.எல்.ஏ.,க்கள் இறந்ததை அடுத்து, வரும் நவம்பரில் இடைத் தேர்தல் நடந்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள  குட்டநாடு, சவாரா ஆகிய தொகுதிகளின், எம்.எல்.ஏ.,க்கள் இறந்ததை அடுத்து, வரும் நவம்பரில் இடைத் தேர்தல் நடந்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, கேரளாவின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரளாவில், சட்டசபை தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், அதற்குள் இடைதேர்தல் நடத்துவது தேவையற்ற செலவு என்றும் அரசியல் கட்சிகள் தெரிவித்தன,. இது குறித்து அனைத்து கட்சிகளும் கூடி ஒருமித்த முடிவு எடுத்தால், அது ஏற்கப்படும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், இடைத்தேர்தல் வேண்டாம் எனஒருமித்த முடிவு எடுக்கப்பட்டால் அதன் விபரம் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும்' என கேரள அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.