வங்கிக்கடன் மாதத்தவணை விவகாரம் - வட்டி தள்ளுபடி குறித்து ஆராய குழு அமைப்பு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 02:26 PM
வங்கிக்கடன் மாதத்தவணை விவகாரத்தில், ஆறு மாத காலத்திற்கான வட்டியை, வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீது விசாரணை நடந்து வருகிறது.
வங்கிக்கடன் மாதத்தவணை விவகாரத்தில்,  ஆறு மாத காலத்திற்கான வட்டியை, வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீது விசாரணை நடந்து வருகிறது. இதை பற்றி மத்திய அரசு தனது நிலைபாட்டை செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.  இந்த நிலையில், 6  மாத காலத்திற்கான வட்டி தொகையை முழுவதமாக தள்ளுபடி செய்தால், வங்கிகள் மற்றும் இந்திய பொருளாதாரம் மீது அது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி ஆராய மூன்று நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.  அந்த குழுவிற்கு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னால் கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையிலான இக்குழுவில், ரிசர்வ் வங்கியின் நிதி குழுவின் முன்னாள் உறுப்பினர் ரவிந்திர தோலாக்கியா மற்றும் எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் பி.ஸ்ரீராம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.