நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு - மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 02:03 PM
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம்
தொடர்பாக, அவரது காதலி ரியா சக்ரவர்த்தியிடம், நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.  நீதிமன்ற உத்தரவுப்படி 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார் ரியா. இந்த நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், நடிகை ரியா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் அளித்தால் போதைப்பொருள் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்த சாட்சியங்களை அழிக்கக்கூடும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், ரியாவுக்கு ஜாமீன் மறுத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.