மது பழக்கத்தை கைவிட அறிவுறுத்திய மனைவி - தம்பிள்ஸால் மனைவியை தாக்கிய கணவன்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 11:56 AM
ஆந்திர மாநிலத்தில், தம்பிள்ஸ் கொண்டு மனைவியை தாக்கிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
கொவ்வூரை சேர்ந்த சீனு, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.மது பழக்கத்தை கைவிடுமாறு, சீனுவின் மனைவி மாதவி அறிவுறுத்தியுள்ளார். கடும் கோபம் அடைந்த ஓட்டுநர், உடற்பயிற்சி செய்யும் தம்பிள்ஸ் கொண்டு மனைவி தலையில் தாக்கியுள்ளார். 
படுகாயம் அடைந்த மாதவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தும், ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரின் தலையீடு காரணமாக சீனு மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.