சீன விவகாரத்தை வெளிப்படையாக பேச பிரதமர் தயங்குவது ஏன்? - காங் எம்.பி. கேள்வி
பதிவு : செப்டம்பர் 11, 2020, 10:59 AM
ஆதாரமில்லாமல் வெவ்வெறு வழக்குகள் பதிந்து இந்தி நடிகை ரியா சக்கரவர்த்தியை பா.ஜ.க. துன்புறுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
ராணுவத்தின் பணி குறித்து பெருமை கொள்வதாகவும், அதே நேரத்தில் கால்வான் சம்பவம் தொடர்பான எங்களின் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என காங்கிரஸ் எம்.பி. அதிர்ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். சீன படைகள் ஊடுருவவில்லை, நாட்டின்  எந்த பகுதியையும் கைப்பற்றவில்லை என மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி தயங்குவது ஏன் எனவும் அதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிக்கைக்கும், பிரதமரின் பேச்சுக்கும்  நிறைய வேறுபாடு இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள சவுத்ரி, பீகார் தேர்தலை மனதில் கொண்டு இ சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கை பா.ஜ.க. கையாளுவதாக குற்றம்சாட்டி உள்ளார். ஆதாரம் இல்லாமல் வெவ்வேறு வழக்குகளில் ரியா சக்கரவர்த்தியை மத்திய அரசு துன்புறுத்தி வருவதாகவும், பீகாரிகளுக்கு பா.ஜ.க. மட்டும் தான் நீதி வழங்கும் என்பது போன்று ஒரு பிம்பத்தை பா.ஜ.க. உருவாக்கி வருவதாகவும் அதிர் ரஞ்சன் சவுத்ரி சாடியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.