கங்கனா ரானவத்துக்கு அரசியலில் விருப்பம் இல்லை - மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே
பதிவு : செப்டம்பர் 11, 2020, 10:53 AM
மும்பையில் கங்கனா ரனாவத்துக்கு தேவையான பாதுகாப்பை தமது இந்திய குடியரசு கட்சி வழங்கும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை கங்கனா ரானவத்தை, மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே மாலை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அரசியலில் சேர கங்கனா ரனாவத்துக்கு விருப்பம் இல்லை என்றும், சமூகத்தில் ஒற்றுமையை உருவாக்கவே விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார். தலித் பெண்ணாக ஒரு படத்தில் நடித்து வருவதாகவும், சாதி முறையை நாட்டில் இருந்து அழிக்க வேண்டும் என்றும் கங்கனா ரானவத் விரும்புவதாக கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.