இந்திய நீதிமன்றங்களில் நீரவ் மோடிக்கு நீதி கிடைக்காது - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி
பதிவு : செப்டம்பர் 11, 2020, 10:19 AM
நீரவ் மோடிக்கு இந்திய நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்காது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
நீரவ் மோடியை நாடு கடத்தக் கோரும் இந்திய அரசின் மனு மீது, இன்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இதில் நீரவ் மோடிக்கு ஆதரவாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ  காணொலி மூலம் ஆஜராகிறார். நீரவ் மோடிக்கு இந்தியாவில் நியாயம் கிடைக்காது என அவர் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கட்ஜூ இதனை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ஆவணத்தில், நீரவ் மோடியை இந்திய அரசும், ஊடகங்களும் குற்றவாளி என முடிவு செய்துவிட்ட நிலையில், அவருக்கு இந்திய நீதிமன்றங்களில் நேர்மையான, நியாயமான தீர்ப்பு கிடைக்காது என குறிப்பிட்டு உள்ளதாகவும் கட்ஜூ தெரிவித்துள்ளார். மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நீரவ் மோடி ஒரு குற்றவாளி என தெரிவித்துள்ள நிலையிலும், இந்திய நீதித்துறை மத்திய அரசுக்கு கீழ்படிதலுடன் பணியாற்றி வருவதாகவும் அந்த பேட்டியில் கட்ஜூ தெரிவித்துள்ளார். ஓருவரை குற்றவாளி என நீதிமன்றம் தான் கூறமுடியும் என்றும், மத்திய சட்ட அமைச்சர் எப்படி தீர்ப்பு அளிக்க முடியும் என்றும் கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.