இலங்கை சீனாவையும், இந்தியாவையும் பகைத்துக்கொள்ளாது - சீனாவிற்கான இலங்கை தூதர்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 10:05 AM
மகிந்த ராஜபக்சே அரசாங்கம் ஒருபோதும் சீனாவையும், இந்தியாவையும் பகைத்துக்கொள்ளாது என சீனாவிற்கான இலங்கை தூதர் பாலித்த கொஹன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய பாலித்த கொஹன்ன, இலங்கை அரசின் கொள்கை தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இதன்படி இந்தியா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.

 இருநாடுகளுடனும் எந்தஒரு பிரச்சினையும் இல்லை எனவும் எதிர்காலத்திலும் பிரச்சினைகள் ஏற்படாது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவுடன்  மிகவும் நெருக்கமாக நட்புறவைக் கொள்ள வேண்டிய அதேநேரத்தில், சீனாவுடன் எமக்கு வரலாற்றுத் தொடர்பும் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெருக்கடி மற்றும் அதற்கு பிந்தைய காலங்களில் சீனா செய்த உதவிகளை மறக்க முடியாது என்றும் பாலித்த கொஹன்ன தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.