ரஷ்யாவில் இந்தியா - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 09:55 AM
ரஷ்யாவில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடந்தது.  இதில்
பாதுகாப்புத்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது,அவர், சீன பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து பேசினார். இதேபோல் நேற்று,  வெளியுறவு துறை அமைச்சர்களில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட  வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை சந்தித்து பேசியதாக, ரஷ்யா தூதரம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் முத்தரப்பு ஒத்துழைப்பினை, கூடுதலாக வலுப்படுத்துவதற்கான விவகாரங்களை பரிமாறி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.