ஜனவரி 20 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 09:41 AM
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15 ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்துள்ளார். முன்னதாக வருகின்ற நவம்பர் 16-ஆம் தேதி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், அன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.