"மொழித் தேர்வில் தோல்வி அடைந்தால் பணி நீக்கம் செய்யலாம்"
பதிவு : செப்டம்பர் 11, 2020, 08:57 AM
டி.என்.பி.எஸ்.சி, நடத்தும் மொழித் தேர்வில் மனுதாரர் பங்கேற்க வேண்டும் என்றும், அதில் தோல்வி அடைந்தால் அவரை பணி நீக்கம் செய்யலாம் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெய்குமார் என்பவர், தேனி மின் பகிர்மான வட்டத்தில், இளநிலை உதவியாளராக சேர்ந்தார். இவர் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயிலாததால், பணியில் சேர்ந்து 2 ஆண்டிற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் பணிலிருந்து நீக்கி உத்தரவிட்டப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஜெய்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மனுதாரருக்கு, டிஎன்பிஎஸ்சி அடுத்து மொழித்தேர்வு நடத்தும் வரை பணி நீட்டிப்பு வழங்க உத்தரவிட்டார். மொழித் தேர்வில் மனுதாரர் பங்கேற்க வேண்டும் என்றும், அதில் அவர் தோல்வி அடைந்தால் பணி நீக்கம் செய்யலாம் உத்தரவிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.