"அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை"
பதிவு : செப்டம்பர் 11, 2020, 08:51 AM
2020 -21-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2020 -21-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கல்லூரிக்கல்வி இயக்குநர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கருத்தை பரிசீலித்து, இந்த கல்வியாண்டில், கலை பாடப்பிரிவிற்கு, 20 சதவீதம் கூடுதலாகவும்,  அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு, ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு, பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.