"கிசான் திட்டம் முறைகேடு - சி.பி.ஐ விசாரணை தேவை"
பதிவு : செப்டம்பர் 11, 2020, 08:42 AM
கிசான் திட்ட முறைகேட்டை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சரை, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கிசான் திட்ட முறைகேட்டை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என  தமிழக முதலமைச்சரை, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 110 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ள கிசான் திட்டம் முறைகேட்டில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய விரைவான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்,. மேலும் இந்த முறைகேட்டை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தினால் மட்டுமே  விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, இடைமறித்துக் கொள்ளையடித்துள்ளவர்களை கண்டுபிடிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,. விவசாயிகளின் பணம், வேறு தகுதியில்லாதவர்களுக்குப்  போனதற்கும் அ.தி.மு.க. அரசுதான்  முழு முதற்காரணம் எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.