கிசான் திட்டத்தில் முறைகேடு - சிபிசிஐடி விசாரணை
பதிவு : செப்டம்பர் 11, 2020, 08:34 AM
கிசான் திட்ட முறைகேட்டில் சிக்கிய, வேளாண் விரிவாக்க அலுவலக ஒப்பந்த ஊழியரை, காவலில் எடுத்து, சிபிசிஐடி.போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கிசான் திட்டத்தில், அதிக முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாவட்டங்களில்,  உள்ள 22 வட்டாரங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஒவ்வொரு வட்டத்திலும், குறுவட்ட அளவில் ஆய்வு செய்து போலி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக உளுந்தூர்பேட்டை வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில், ஒப்பந்த ஊழியர் கண்ணப்பனை, 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு, விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதைதொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் கிஷான் திட்ட மோசடி -  580 போலி கணக்குகள் முடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடியில், 580 போலி கணக்குகள் முடக்கப்பட்டு 11 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் மற்றும் பயனாளிகளின் விபரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 580 பேர் விவசாயி என்ற பெயரில் போலியாக சேர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கிய அதிகாரிகள், 11 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிசான் திட்டம் முறைகேடு - 3 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம் 

வேலூர் மாவட்டத்தில்  கிசான் நிதி உதவி  திட்டம் மூலம்  1 கோடியே 20 லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்று உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலியான முகவரி கொடுத்து பணம் பெற்றவர்களின் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு 50 லட்சத்து 79  ஆயிரம்  ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது.மீதமுள்ள தொகையை விரைவில்  திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவருவதாக வேளாண் துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சி.பி.சி.ஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.