பள்ளி கல்வி மாநாடு - இன்று மோடி உரை
பதிவு : செப்டம்பர் 11, 2020, 08:25 AM
21ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது.
21ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது. இரண்டாவது நாளான இன்று காலை பிரதமர் மோடி உரையாற்றுகிறார். தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலமாக மோடி உரையாற்ற இருக்கிறார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் அவர், இன்று பிற்பகல் 3 மணி அளவில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு செல்கிறார்.

கூட்டுறவு திட்டப் பணிகள் - நாகர்கோவிலில் அமைச்சர் இன்று ஆய்வு

நாகர்கோவிலில் கூட்டுறவு திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு இன்று ஆய்வு மேற்கொள்கிறார். ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

குடிமராமத்து பணி வழக்கு - இன்று விசாரணை

கொடைக்கானல் மன்னவனூர் எழும்பள்ளம் கண்மாயில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று  விசாரணை நடைபெறுகிறது. 

ஸ்ரீதர் ஜாமீன் மனு - இன்று விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் காவலர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த விசாரணை நடைபெற உள்ளது .

விருதுநகரில் காங்., எம்பி இன்று ஆய்வு

விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பங்கேற்று தலைமை வகிக்கிறார். 

விருதுநகரில் விவசாயிகள் போராட்டம்

பெறுகிறுது. அங்குள்ள தேசபந்து மைதானத்தில் உள்ள தபால் அலுவலகம் முன்பு காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த போராட்டத்தில் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி, விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறுகிறது. 

இன்று கரை திரும்பும் மீனவர்கள் 

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், விசைப்படகில் இயந்திர கோளாறு காரணமாக  நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அப்போது, அந்த பகுதியில் ரோந்து சென்ற, இந்திய கடலோர காவல் படையினர்  9 பேரையும் மீட்டனர். இந்நிலையில், இன்று காலை தருவைக்குளம் பகுதிக்கு அவர்களை கடலோர காவல் படையினர் அழைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

இம்மானுவேல் சேகரனின் 63வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு, அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் உட்பட 36 மனுக்களுக்கு ஆட்சியர் வீரராகவ ராவ் அனுமதி அளித்துள்ளார்.  கொரோனா காரணமாக, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.