வறுமை காரணமாக குழந்தையை விற்ற தம்பதி - தரகர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார்
பதிவு : செப்டம்பர் 10, 2020, 07:33 PM
வறுமை காரணமாக பிறந்து 20 நாட்களேஆன பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல். மாற்றுத்திறனாளி. இவரின் மனைவி சுதா. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

ஏற்கனவே வறுமையில் இருந்த அவர்களுக்கு 4வது குழந்தையை வளர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை விற்றுவிட அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து குழந்தையை விற்கும் தங்களின் திட்டத்தை பெளலினா என்ற பெண்ணிடம் கூறியுள்ளார் முருகவேல். 

கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் - கோகிலா தம்பதியருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததை அறிந்த பெளலினா, தரகராக மாறி குழந்தையை அவர்களிடம் விற்றுள்ளார். இதற்காக 80 ஆயிரம் ரூபாய் பணமும் கைமாறியுள்ளது. 

இந்த தகவல் கோவை குழந்தைகள் நல அலுவலகத்தின் கவனத்திற்கு செல்லவே, விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து குழந்தையை போலீசார் மீட்டனர்

பிற செய்திகள்

பி.ஏ. படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது - மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு டாக்டர் என கூறி சிகிச்சை அளித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

10 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம், நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

68 views

எதிர்க்கட்சிகளின் விவாதங்களுக்கு நேரம் வழங்கவில்லை - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, பெய்களை பரப்பிட நினைக்கும் அதிமுக அரசின் கபடநாடகம், அதிக காலம் நீடிக்காது என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12 views

முன்கள பணியாளர்களுக்கு நன்றி கூறும் பாடல் - பாடலை வெளியிட்டார் சென்னை மாநகர காவல் ஆணையர்

காவல்துறை சார்பில் 'சலாம் சென்னை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் இணைந்து இந்த பாடலை வெளியிட்டனர்.

69 views

பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் புரட்டாசி திருவிழா துவக்கம் - அரசின் வழிகாட்டுதலின் படி பக்தர்கள் சுவாமி தரிசனம்

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.