விசாரணையின் முடிவில் சிபிசிஐடி முடிவெடுக்கும் - ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து
பதிவு : செப்டம்பர் 10, 2020, 05:39 PM
ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் விவகாரத்தில் அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நடராஜன் மீது கொலை வழக்கு பதிய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டர் தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை கோரியும், மறு பிரேத பரிசோதனை கோரியும் தாயார் கோவிந்தம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் எழும்பூர் மாஜிஸ்திரேட் அறிக்கையும், சிபிசிஐடி விசாரணையின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது ,  பிரேத பரிசோதனை அறிக்கையை பார்க்கும்போது, தற்காப்புக்காக சுட்டதாக தெரியவில்லை என்றும், திட்டமிட்ட படுகொலையை செய்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி,  இந்த வழக்கில் பிரிவுகளை மாற்ற வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு பிறகுதான் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

617 views

பிற செய்திகள்

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவ சேர்க்கை - மீனவ சமுதாய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் இருக்கும் 8 இடங்களை மீனவ சமுதாய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

4 views

மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை - 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு

ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

3 views

முன்னாள் காதலனுடன் விஷம் அருந்திய பெண் - திருமணமான பின்னரும் தொடர்ந்த காதல்

ஒசூரில், திருமணமான பெண் தன் முன்னாள் காதலனுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

8 views

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

822 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

73 views

கொரோனா தொற்று குணமடைந்தாலும் கவனம் - எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

2896 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.