மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்க கூடாது - அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை கண்டிப்பான உத்தரவு
பதிவு : செப்டம்பர் 10, 2020, 05:04 PM
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக தலைமையாசிரியர்கள் எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
பல்வேறு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளி  தலைமை ஆசிரியர்கள் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கோவை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் கேட்கும் பாடப்பிரிவு தர முடியும் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இது தொடர்பாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர், ஒரு மாணவனின் தாயாரிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையே தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் கேட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா இன்று நேரடியாக ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.  

பிற செய்திகள்

கந்து வட்டி கேட்டு மிரட்டல் - பிரதமரின் பாராட்டு பெற்ற சலூன் கடை உரிமையாளர் மீது புகார்

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

7 views

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை - 30,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு

கொரோனா பரவல் நிலையை கண்டறிய, தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

85 views

"கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

இந்திய கலாச்சார ஆய்வு குழுவில், தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

19 views

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க கருவி - ஆறு விதமான கருவிகளை உருவாக்கிய மெக்கானிக்

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார் நாகையை சேர்ந்த மெக்கானிக் ஒருவர்.

265 views

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டம் :முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,.

46 views

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

226 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.