ஆப்கானிஸ்தான் துணை அதிபருக்கு குறிவைப்பு - வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 09, 2020, 06:45 PM
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லா சலேவை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லா சலேவை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மயிரிழையில் உயிர்தப்பிய அம்ருல்லா சலே, தன்னுடைய முகம், கைகளில் தீக்காயம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். காபூல் நகரில் பாதுகாப்பு வாகனங்களுடன் அவர் சென்றபோது, வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த வெடிவிபத்தை அடுத்து அப்பகுதி கடைகளில் இருந்த சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால், இச்சம்பவத்தில், 10 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.