கங்கனா ரனாவத் வீட்டின் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை
பதிவு : செப்டம்பர் 09, 2020, 04:45 PM
நடிகை கங்கனா ரனாவத் பங்களா வீட்டை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மும்பை பாந்திரா, பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரனாவத்தின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனை அகற்ற  மும்பை மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் வழங்கியது. நடிகையின் வீட்டில் யாரும் இல்லாததால் அவரது வீட்டு வாசலில் நேந்று அதிகாரிகள் நோட்டீசை ஒட்டிச்சென்றனர். இந்நிலையில், இன்று பங்களாவை இடிக்கும் பணியை மும்பை மாநகராட்சி துவங்கியது. இதற்கிடையே, கங்கானா தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் பங்களாவை இடிக்க தடை விதித்தது. எனினும், அதற்கு முன்பாகவே பங்களாவின் ஒரு பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் இடித்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.