நீட் தேர்வுக்கு தடை கோரிய மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பதிவு : செப்டம்பர் 09, 2020, 04:35 PM
செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு தடை கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வை தள்ளி வைக்க கோரி,  20 மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 
நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை நடத்தும் போது போதுமான பாதுகாப்புடன், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். 

இதனையடுத்து நீதிபதிகள், வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்தி விட முடியாது என்றும், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்தாக வேண்டும் என்றும்,  ஓராண்டு இழப்பதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனரா? என கேள்வி எழுப்பினர். 

நீதிமன்றத்தில் நேரடி விசாரணை வேண்டும், நீதிமன்றத்தை திறக்கவேண்டும் என, கோரவில்லையா?  அப்படி இருக்கும் போது தேர்வு ஏன் நடைபெறக்கூடாது? என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். 
பின்னர், தேர்வுக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.