தமிழக காவல் துறைக்கு உலக அரங்கில் சிறப்பான பெயர் உள்ளது - நீதிபதி புகழேந்தி
பதிவு : செப்டம்பர் 09, 2020, 02:37 PM
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறையும் நிலையில், மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என தமிழக காவல்துறைக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர் செந்தில் என்பவர் சொத்து தகராறில் கடந்த 2010 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலமுருகன் என்பவருக்கு சிவகங்கை நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு  5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. இதை ரத்து செய்யக்கோரி பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு 
நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடைபெற வேண்டும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதே போல் விசாரணை தொடர்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என தெரிவித்துள்ள நீதிபதி, விசாரணை அதிகாரிகள் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் போதிய நிபுணத்துவம் பெற்றுள்ளார்களா?  என கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணையின் தரத்தை மேம்படுத்தவும், தற்போதுள்ள அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்தவும் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்பது தொடர்பாக,  உள்துறை செயலர், டி.ஜி.பி. ஆகியோர் பதிலளிக்க  நீதிபதி உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.