ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதிவு : செப்டம்பர் 09, 2020, 02:32 PM
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்திய  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை எனவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். ஆன்லைன் வகுப்பு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல் அவசியம் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்றும், வழிகாட்டுதலை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 வழிகாட்டுதல்களை நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.