காதலுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண் - 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் பழிக்குப்பழி
பதிவு : செப்டம்பர் 08, 2020, 08:21 PM
5 வருடங்களுக்கு முன்னால் காதல் விவகாரத்தில் மகள் தற்கொலை செய்து கொண்டதை பொறுக்க முடியாத ஒரு தந்தை காதலனின் தந்தையை பழிக்குப்பழியாக தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கப்பூரை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி பூங்கோதை. இவர்களுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். 

அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவியின் மகளான இலக்கியாவை கார்த்திக் 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டுக்கும் தெரியவரவே, ரவி தன் மகளை கண்டித்துள்ளார். 

ஆனால் காதலில் பிடிவாதமாக இருந்த இலக்கியா தன் காதலனுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். மகளின் நடவடிக்கையால் விரக்தியடைந்த ரவி, இலக்கியாவிடம் கடுமையாக தன் கோபத்தை காட்டவே, மனமுடைந்த அவர் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ஆசையாக வளர்த்த மகள் உயிர் அநியாயமாய் போனதால் ரவியின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. தன் மகளின் மரணத்திற்கு கார்த்தியின் காதல் தான் காரணம் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட அப்போதே திட்டம் தீட்டியிருக்கிறார் ரவி. இதற்காக 5 வருடங்கள் வரை காத்திருந்து ஸ்கெட்ச் போட்டார் முன்னாள் ராணுவ வீரரான ரவி. 

இந்த சூழலில் தான், தன் மகன் ஸ்ரீராம், உறவினர் சதீஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு நேராக கார்த்தியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றார். அப்போது கார்த்தி அங்கே இல்லாததை அறிந்த அவர், கோபத்தின் விளிம்பிற்கு சென்றார். 

இருந்த போதிலும் கார்த்தியின் தந்தையான மதிவாணனை தான் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரை விட்டார், மதிவாணன். 

ஆத்திரம் தனியாத ரவி, அங்கிருந்த பூங்கோதையின் கையையும் அரிவாளால் வெ​ட்டினார். இதில் அவரின் கையும் துண்டாகி தனியே விழுந்தது. மேலும் அவரையும் அரிவாளால் வெட்டியதில் மயங்கி சரிந்தார் பூங்கோதை.

படுகாயமடைந்த அவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மதிவாணனின் சடலத்தை கைப்பற்றியதோடு, தப்பி ஓடிய ரவி, அவரின் மகன் ஸ்ரீராம் மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரையும்  தேடி வருகின்றனர். 

மகளின் மரணத்துக்கு பழிக்குப்பழியாக 5 வருடங்களுக்கு பிறகு நடந்த இந்த கொடூர கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

253 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

56 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

32 views

பிற செய்திகள்

"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19 views

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

94 views

"சம்பிரதாயத்துக்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது" - தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு

புதுக்கோட்டையில் நடந்த திமுகவின் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில் பலர் தங்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.

9 views

கொள்ளிடம் புதிய கதவணை கட்டுமான பணிகள் 55% நிறைவு - பொதுப்பணித்துறை தகவல்

கொள்ளிடம் ஆற்றில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

215 views

நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் 7வது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

156 views

விருத்தாச்சலம்: மருத்துவமனையில் எலித்தொல்லை - தாய்மார்கள் அவதி

விருத்தாச்சலம் அரசு பொது மருத்துவமனையில் எலிகள் தொல்லையால் தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

116 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.